இந்தியா

“கோ கொரோனா, நோ கொரோனா” வேடிக்கையாக பேசிய அமைச்சர்..! வேதனையில் மக்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அப்போது  ‘கோ கொரோனா’ என கோஷமிட்டேன், கொரோனா போய்விட்டது. இப்போது நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் ” என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.


இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சராகவும் இருந்து வருகிறார் ராம்தாஸ் அத்வாலே. மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் வசித்து வரும் இவர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோ கொரோனா’ என்ற முழக்கத்தை கூறி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.

மரபியல் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  நிலையில் மத்திய அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே, இது குறித்து பேசியுள்ளார். அதில்,“அப்போது ‘கோ கொரோனா; கொரோனா கோ’ என்றேன். கொரோனா போய்விட்டது. தற்போது புதிய கொரோனா வைரஸ் வந்துள்ளது. அதனால் ‘நோ கொரோனா! கொரோனா நோ’ என கோஷமிடுங்கள்” என ராம்தாஸ் அவர் தெரிவித்தார். இதனிடையே ’கொரோனா கோ’ என்று கூறிய இவருக்கு  கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  தொடங்கியது "பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு...!


இன்று உலகநாடுகளே கொரோனா பீதியில் இருக்கும் பொழுது மத்தியமைச்சர் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

#corona #coronavirus #coronavaccin #tamilthisai #centralminister #ramdasathawale


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பனியில் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள்.. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்….

naveen santhakumar

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு மீண்டும் தொற்று

News Editor

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном Времени Онлай

Shobika