சினிமா

‘கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  


கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  
கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது நடிகர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி அன்று காலை 10.18 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தது.கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!

அதில்,”“நான் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகன். நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டப் படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை விட சிறந்த வழி எதுவும் இல்லை. பிரித்விராஜ் புரடொக்‌ஷன் ‘கே.ஜி.எஃப் 2’ வழங்குவதை பெருமைக்கொள்கிறது.உங்களைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இனிமேல் இப்படி செய்யாதீங்க” – வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா …!

naveen santhakumar

உன் அழகில் ஏறும் போதை… அசத்தும் நடிகை வித்யா பாலன்

Admin

RRR திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin