தமிழகம்

பொள்ளாச்சி வழக்கு; அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணைக்காக சி.பி.ஐ கையில் எடுத்து. சி.பி.ஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள்  ஹெரென் பால்,  பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக  கைது செய்துள்ளனர்.

ALSO READ  'பாஸ்டேக்' மூலம் சுங்க கட்டண வசூல் இரண்டு வாரங்களில் 52 கோடி

இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்சும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

#pollachi #victimcase #tamilthisai #edapadipalanisami #opaneerselvam #admk


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய வேண்டும்; காங்.மாநில தலைவர் அழைப்பு !

News Editor

அதிமுகவிற்கு தான் என்னுடைய ஆதரவு; நடிகர் சுமன் பேட்டி 

News Editor

12ம் வகுப்பு துணைத் தேர்வு- பதிவு தொடங்கியது..!

naveen santhakumar