தமிழகம்

கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய வேண்டும்; காங்.மாநில தலைவர் அழைப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். 

தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர்.  அந்தவகையில் தமிழகம் வருகை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

ALSO READ  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..!

அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சியில், அதிமுக அரசு உடந்தையாக இருப்பதாகக் குறை கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி விருப்பம் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு கமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூமிக்கடியில் புதைந்த வரலாறு… 6ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

Admin

காவலர் வீரவணக்க நாள்- ஸ்டாலின் வாழ்த்து- தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்

naveen santhakumar

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

naveen santhakumar