சினிமா

பிக் பாஸ் புகழ் தர்ஷனுடன் ஜோடி சேரும் லாஸ்லிய !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கம் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மற்றோரு பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கவுள்ளார். யோகி பாபு, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ALSO READ  பொதுத்தேர்தல் அட்டவணைக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன் 

இத்திரைப்படம் மலையாள படத்தின் தமிழ் ரிமேக் எனவும் அதற்கு “கூகுள் குட்டப்பன்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.

இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதானல் இப்படத்தினை பல மொழிகளில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். அந்தவகையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இதன் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினர்.

ALSO READ  “உன் ஒற்றை பார்வை..ஓடி வந்து உயிரை தொட்டதோ” - கருப்பு நிற உடையில் சன்னி லியோன்

அதனை தொடர்ந்து அவரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவருக்கும் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தினை தமிழில் இயக்க வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

naveen santhakumar

சர்ச்சையை ஏற்படுத்திய ‘A Suitable boy’ சீரிஸ்:

naveen santhakumar

‘RRR’படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய பிராபல நிருவனம்..!

News Editor