தமிழகம்

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இதனை தடுக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

ALSO READ  ஆக்சிஜன் பற்றாக்குறை; அமைச்சர்கள் திடீர் ஆய்வு ! 

இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை பொறுத்தவரையில் ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

Admin

நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!

News Editor

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு… எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா-ன் பெயரை சூட்டிய- எடப்பாடி பழனிசாமி…

naveen santhakumar