சினிமா

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘இந்த நிலையில்தான்  இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ‘தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழ்த் திரை ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியத் திரை ரசிகர்களும் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர் 

ALSO READ  மாட்டின் உடம்பில் பச்சை குத்திய விவசாயி…

இப்படத்தின் படப்பிடிப்பானது இந்தாண்டு ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில தொடங்குவதாக இருந்தது. ஆனால் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா  வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால், படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் நாளை அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor

மாநாடு விவகாரம்: சிம்பு மற்றும் குடும்பத்தினர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார்

naveen santhakumar

கொரோனா தொற்று உறுதி… வடிவேலு உடல் நிலை எப்படியிருக்கு?

naveen santhakumar