தமிழகம்

தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் மே மாதம் 24ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணைய குழுவினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் சட்டப் பேரவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், நாளை மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார்.


Share
ALSO READ  தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் இல்லை……..

naveen santhakumar

150 பேருக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

naveen santhakumar

தமிழக பட்ஜெட் ஆலோசனை: எதிர்பார்ப்பில் மக்கள் ?

naveen santhakumar