சினிமா

பரபரப்பை கிளப்பும் “தலைவி” படத்தின் டிரைலர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிகை கங்கனா ஜெயலலதாவின் நான்கு தோன்றங்களில் தோன்றியுள்ளார்.

ALSO READ  தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்-பிரதமர் மோடி பேச்சு !

இந்த டிரைலரில் மூலம் சினிமா முதல் அரசியல் வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரு நிமிடம் பார்ப்பவரின் கண்முன் கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

#thalaivi #TamilThisai #kanganaranaut #ALvijay #Jeyalalitha #Aravithsamy #cinema #cinemanews #cineupdate #kollywood #MGR #tamilnadu #admk #JeyalalithaBioPic #ThalaiviTrailer


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“மீடூ” இயக்கத்தின் உதவியால் தான் அன்று நான் தப்பித்தேன் – சாய் பல்லவி

News Editor

வெளியானது “தலைவி” படத்தின் அடுத்த அப்டேட் !

News Editor

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

News Editor