இந்தியா

தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்-பிரதமர் மோடி பேச்சு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் நரேந்திர மோடி 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையன்றி வருகிறார். அந்தவகையில் இன்று அவர் பேசுகையில், இந்தியாவிற்கு அறுவடைக்குப் பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி தேவை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”விவசாயக் கடன் இலக்கை அரசு ரூ .16.50 லட்சமாக உயர்த்தியுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பிற்கான நிதி ரூ. 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மைக்ரோ பாசன நிதி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு, வேளாண் உற்பத்தி அதிகரிப்பிற்கு மத்தியில் அறுவடைக்குப் பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி மற்றும் வேளாண் மதிப்புக்கூட்டல் தேவை. இது 2-3 தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்தால் நாட்டிற்கு நல்லதாக இருந்திருக்கும். வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது”. என தெரிவித்தார். 


Share
ALSO READ  டெல்லி எல்லையில் இரண்டு நாள் இணைய சேவை முடக்கம்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாது – சீரம் நிறுவனம்?

naveen santhakumar

ரிபப்ளிக் டிவியின் CEO டி.ஆர்.பி மோசடி வழக்கில் கைது….

News Editor

Bukmeker şirkəti Mostbet Azərbaycan APP yükləmə

Shobika