சினிமா

‘மாநாடு’ படத்தில் இணைந்த கூக் வித் கோமாளி புகழ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 

“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள படக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள இரவு நேரக் காட்சிகளை படமாக்கி வருகிறது. 

இதனையடுத்து இப்படத்தில் கூக் வித் கோமாளி புகழ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மாநாடு படப்பிடிப்பில் அவர் இடம் பெற்றுள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இது குறித்த எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

ALSO READ  தனுஷ் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

#maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai #KalyaniPriyadharsan #Tamilmovie #cinema #CinemaUpdate #CinemaBuzz #kollywood #CineUpdate #CookWithComaliPugazh


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம் !

News Editor

திரையரங்கில் 100 சதவீத அனுமதி ரத்து !

News Editor

மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன் படத்தில் இணைத்தஏ.ஆர்.ரகுமான் !

News Editor