தமிழகம்

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; மேடை நடன கலைத்துறையினர் சார்பில் மனு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மாவட்ட மேடை நடன கலை துறை நலச்சங்கமானது, கோவை நீலிகோணம்பாளையம் பகுதியில்  செயல்பட்டு வருகின்றது, இதன் தலைவர் சண்முகம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்தனர் அதில்,  கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக போடப்பட்டுள்ள, கொரோனா ஊரடங்கு காரணமாக, எங்களது சங்கத்தின் உறுப்பினர்களை காக்கவும் மேடை கலையை மீட்டெடுக்கவும், ஐந்து கோரிக்கைகளை  செய்து தர வேண்டும்.

ALSO READ  காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்….

கோவை மாவட்டம் முழுவதும், சங்கத்தில் பதிவு செய்த, குழுக்களுக்கு அமைதியாக நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலைஞர்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அரசின் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பால் இரண்டு வருடமாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் கோவை மாவட்ட கலைஞர்களுக்கு வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்க வேண்டும். 


இந்த கடனை வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்த பின்பு திருப்பி செலுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் எனவும், கலைஞர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக குறைந்தபட்சம் 5 ஆயிரம், மாதம் ஊக்கத்தொகை  வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முட்டிக்கொள்ளும் அனிதா சம்பத் கணவர்-டான்ஸ் மாஸ்டர் சதீஷ்:

naveen santhakumar

நாளை 1 மணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் :

naveen santhakumar

ரேஷன் கடைகள் மாற்றம் – தமிழக அரசு முடிவு..!

naveen santhakumar