தமிழகம்

விவசாயின் வீடு இடிப்பு; ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் மாவட்டம் வாழப்பாடி துக்கியாம் பாளையம் காக்கச்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவரது மனைவி செல்வமணி. இருவரும் காக்காச்சி பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் 27 சென்ட் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் வாங்கிய தோட்டத்தில் சோளம் பயிரிட்டு இருந்தார். அந்த இடத்தில் விவசாயி செல்வம் மற்றும் மனைவி செல்வமணி ஆகியோர் தங்குவதற்காக ரூபாய் 30,000 ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் அட்டைகளால் செய்யப்பட்ட கொட்டகையும் அமைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இந்த நிலத்தை வாங்கிய செல்வம் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி  இரவு சுமார் 8 மணி அளவில் பக்கத்து தோட்டக்காரர்கள் ஜெயராமன் மற்றும் அவரது மகன் நந்தகுமார் அவரது மருமகன் ராஜராஜன் ரகு ராஜா, ரவி மற்றும் ஜேசிபி இயந்திரம் வைத்துள்ள வெங்கடேஷ் ஆகியோர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் செல்வத்தின் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் கத்தி கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து செல்வதை தரம் தாழ்ந்து வார்த்தைகளால் திட்டியதுடன் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கொட்டகையும் இடித்து தள்ளி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் அங்கிருந்து தப்பி ஓடி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்

ALSO READ  மாசி மாத பலன்கள்… வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் கடக ராசிக்காரர்களே..

இதுகுறித்து தகவலறிந்த செல்வத்தின் மகன்  அண்ணாமலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது அவரையும் தாக்கியதால்  அங்கிருந்து தப்பிச் செல்லும்போது இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் உன்னையும் உன் மகனையும்  கொலை செய்தே தீருவோம் என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். 

இது குறித்த புகார் வாழப்பாடி காவல் நிலையத்தில் விவசாயி செல்வம் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  19ஆம் தேதி அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் சம்பந்தபட்டவர்கள்  6 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தனர். ஆனால் புகார் கொடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விவசாயி செல்வத்தின் வேதனையாகவே உள்ளது.

ALSO READ  'விஷால் 31' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

விவசாயி செல்வம் ஒவ்வொரு முறையும் இந்த புகார் தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தை அணுகும் போதெல்லாம், வாழப்பாடி பகுதியில் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட  6 பேருக்கு ஆதரவாக செயல்படுவதோடு, இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பஞ்சாயத்து செய்கிறார்களே தவிர மாறாக, தான் அளித்த புகார் மீது வாழப்பாடி காவல் அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் விவசாயி செல்வம், தனது பிரச்சினை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதனிடையே விவசாயிகள் செல்வம் மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் நிலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பான வழக்கு சேலம் வாழப்பாடி நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போலீஸா! அப்போ பால் கிடையாது: பால் முகவர்கள் சங்கம் அதிரடி… 

naveen santhakumar

முட்டிக்கொள்ளும் அனிதா சம்பத் கணவர்-டான்ஸ் மாஸ்டர் சதீஷ்:

naveen santhakumar

விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் தங்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தல்

naveen santhakumar