தமிழகம்

கல்லூரி மாணவியை கொலை செய்த காதலன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் கல்லூரி மாணவியை படுகொலை செய்த காதலன் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு நீதி வேண்டும் என கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த சந்தைப் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. கல்லூரி மாணவியான இவர் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்ரீ வேறு ஒரு நபருடன் பேசியுள்ளார். இதனை அறிந்த பிரதீஸ் காதலி ராஜஸ்ரீ  கண்டித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்ரீயை சந்தித்து பிரதீஸ் பேசியுள்ளார். அப்போது வேறு ஒரு நபருடன் பேசுவதை கைவிடுமாறு கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கஞ்சா போதையில் இருந்த பிரதீஸ் தனது சகோதரனுடன் சேர்ந்து  காதலி ராஜஸ்ரீயை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி போட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 
இந்நிலையில் கல்லூரி மாணவியை படுகொலை செய்த காதலன் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை துணைநிலை ஆளுநர் உடனடியாக தடை செய்ய கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் காவல் நிலையம் அருகே கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ  முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி… 

அப்போது அவர்கள் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும் என கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது உயிரிழந்த பெண்ணின் தாய் ராஜசேகரி சாலையில் உருண்டு பிரண்டு கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ரங்கநாதன் மற்றும் தாசில்தார் அருண் அய்யாவு ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

27 எஸ்.பி.க்கள் இடமாற்றம்- தமிழக அரசு…! 

naveen santhakumar

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது : தமிழக அரசு

News Editor

ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் பொன்முடி

News Editor