அரசியல்

மே 2 ஆம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வேண்டும்; அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மே 1ம் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல் நாளே தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதாக  அதிமுகவுக்கு தகவல் வந்தது, அதனையடுத்து தேர்தல் நடைமுறையின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று தான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் மாறாக அதற்கு முதல் நாள் எண்ண கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார் .

ALSO READ  வலுவடையும் காற்றழுத்தம் - தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைமுறை கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அது ஏற்கனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் IAS அதிகாரி மக்கள் நீதி மையத்தில் இணைந்தார்…..

naveen santhakumar

எல்.முருகனுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

naveen santhakumar

திமுக சொன்ன நீட் ரகசிய திட்டம் என்னவானது?- சீமான்

naveen santhakumar