சினிமா

‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில்  ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவகார்த்தி இயக்கும் புதிய  படத்தில் நடித்து வருகிறார். 

இவர்  இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. டான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். 

சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை, லைகா புரொடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரொடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  கொரோனா எதிரொலி; சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு !

இந்நிலையில் டான் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு கூறுகையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபு தேவ படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ்!

News Editor

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன்,சூரி நிதியுதவி:

naveen santhakumar

ரொம்ப பிஸியான திரிஷா முக்கியத்துவம் இல்லாத கதைகளுக்கு நோ சொல்கிறார்

Admin