உலகம்

அதிபர் கன்னத்தில் அறை… கிடைத்தது 4 மாதம் சிறை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரிஸ்:-

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Watch: Man slaps French President Emmanuel Macron in crowd, two detained

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது‌‌ தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ  தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:
Courtesy

இதையடுத்து அதிபர் மெக்ரான் கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்கிற நபரை, இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமாற்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார்.

ALSO READ  Cheetah-வை சீண்டிய மாடல்; கடித்து குதறிய சிறுத்தை - நடந்தது என்ன ??

அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை ரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனிடையே, தனது கன்னத்தில் அறைந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை எனவும் மெக்ரான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் 10 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று !

News Editor

இலங்கையில் குழந்தை பெற்றெடுத்த ஆண்

Admin

இரிடியம் மற்றும் ஓசுமியம் கண்டுபிடித்த வேதியியலாளர் சிமித்சன் டெனண்ட்

Admin