தமிழகம்

சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்தது சிபிசிஐடி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாணவிகளிடம் அத்துமீறியது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரிந்துள்ளது.

TN Custodial Deaths: Sathankulam Inspector Dodged CB-CID Personnel for Days  Before Arrest

சமூக வலைதளங்களில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டெர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

Siva Shankar Baba - Alchetron, The Free Social Encyclopedia

அதனை அடிப்படையாக வைத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது.

ALSO READ  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

மேலும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட சிலர்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

image

இதனிடையே, சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேறொரு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ALSO READ  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறி சென்று விட்டதா; சுகாதார செயலாளர் விளக்கம் !

News Editor

கொரோனா எதிரொலி; மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் கட்டாயம் !

News Editor

அதிகரிக்கும் கொரோனா பரவல்; சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் !

News Editor