விளையாட்டு

3வது டி20யில் அசால்ட்டாக வெற்றி பெற்ற இந்திய அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்களான தவான் மற்றும் கே எல் ராகுல், தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினர். இதனால் இந்திய அணி அதன் வேகம் உயர்ந்து கொண்டே சென்றது. தவானும், கே.எல்.ராகுலும் 36 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 97 ஆக இருந்தபோது தவான் 52 ரன்களிலும், இதனை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்களிலும் , ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களிலும், கே.எல்.ராகுல் 54 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் விராட் கோலி-மனிஷ் பாண்டே அதிரடியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. விராட் கோலி 26 ரன்கள், மனிஷ் பாண்டே 31 ரன்கள் எடுத்தனர்.

ALSO READ  “ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” - முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

இதனைதொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தனஞ்செயன் டி சில்வா (57 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (31 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியையும் சேர்த்து டி20 தொடரை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்று அதிகரிப்பு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகல்

News Editor

மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் தேர்வு-கிரிக்கெட் சங்கம்

Shobika

2019 t20 போட்டிகளில் அசத்திய கத்துக்குட்டி வீரர்கள்

Admin