தமிழகம்

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

முந்தைய அ தி மு க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான இந்த வழக்கு எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொளி காட்சி மூலம் வழக்கில் சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் ஆஜராகி, அமைச்சரிடம் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  கிஷோர் கே. ஸ்வாமி மீது நடிகை ரோகிணி போலீசில் புகார்…!
Why are you afraid of trial: Madras HC asks TN Minister Balaji

இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கெடு விதித்தனர். எனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம்: அரசு தேர்வுகளுக்கான தேதி வெளியாக வாய்ப்பு

News Editor

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்கள் தொடக்கம்…! 

naveen santhakumar

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin