இந்தியா விளையாட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணியை பாராட்டி பிரிட்டன் அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டி இந்தியா – பிரிட்டன் அணிகள் இடையே நடைபெற்றது. முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன . இந்திய பெண்கள் அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தார்.

பின்னர் 2வது கால்பகுதியில் ஆட்டம் சூடு பிடித்தது . இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோல் அடித்தனர். எனினும் அதில் பிரிட்டன் அணியே முன்னிலை வகித்தது.

ALSO READ  கொரோனாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் ‘டெல்டா பிளஸ்’ :
Olympics 2020: Indian women hockey team loses to Great Britain in the Bronze medal match

இந்நிலையில், ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 5 – 4 என பிரிட்டன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியினரால் வெண்கலப்பதக்கத்தை பெற முடியாமல் போனது.

கடைசி வரை போராடியும் பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை என, இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே அமர்ந்து கதறி அழுதனர்.

இந்நிலையில், பிரிட்டன் பெண்கள் ஹாக்கி அணி நிர்வாகம் சார்பில் ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது. அதில், என்ன ஒரு அற்புதமான போட்டி, என்ன ஒரு அற்புதமான எதிரணி இந்திய அணி. இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.

ALSO READ  பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய 2.6 டன் மாம்பழங்கள்!
 தோற்றாலும் பரிசு

அடுத்த சில வருடங்களில் இந்திய அணியினருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளது. பிரிட்டன் அணியின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பி.இ படிக்கச் ஏ.ஐ.சி.டி.இ அனுமதி !

News Editor

தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்….

naveen santhakumar

ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு!

Shanthi