தமிழகம்

முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விழுப்புரம்

கடந்த பிப்ரவரி மாதம் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீது காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு செய்ததாக புகாா் அளித்தாா். தமிழக அரசு இந்தப் புகாா் தொடா்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவை அமைத்தது.

Rajesh Das IPS Biodata [Harassment Case] -Wiki, Age, Biography, Wikipedia,  Wife Name

மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை சென்னையில் உள்ள காவல்துறைத் தலைவரிடம் புகாா் அளிக்க பெரம்பலூரில் இருந்து சென்னை வந்தபோது செங்கல்பட்டில் மறித்து புகார் விடாமல் இடையூறாக இருந்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ALSO READ  தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்ததை தொடா்ந்து, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் , காவல் கண்காணிப்பாளா் கண்ணன் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இவ்வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இந்த பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து டிசம்பர் 20ம்தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பான அறிக்கை டிசம்பர் 23ம்தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

ALSO READ  தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

இவ்வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் , முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் ஆஜர்படுத்த பட்டர்கள்.

இந்நிலையில் நீதிபதி கோபிநாதன், விசாரணைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இவ்வழக்கை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம்;  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பேட்டி..!

News Editor

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு- நிதியமைச்சர் உறுதி…!

naveen santhakumar

முதன் முறையாக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள்… சூரரைப்போற்று பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி..!!!

naveen santhakumar