அரசியல்

மதன் ரவிச்சந்திரன் முரண் செயல்பாடு :பா.ஜ.க வில் இருந்து நீக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளரானகே.டி.ராகவன், பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன்,

ALSO READ  அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு !
கே.டி.ராகவன் பற்றி வீடியோ வெளியிட்ட மதன் தன்னை சந்தித்து பேசியது என்ன? பாஜக  தலைவர் அண்ணாமலை விளக்கம் | Tamil Nadu BJP president K.Annamalai gives  explanation about ...

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆபாச வீடியோ விவகாரத்தின் மூலம் மதன் ரவிச்சந்திரன் தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “

ALSO READ  வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு !

பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும்

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி !

News Editor

தேர்தல் முடிவு; பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் பின்னடைவு !

News Editor

ஹலோ எப்.எம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமை விருது

Admin