இந்தியா

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2020 – 21ஆம் நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமானத்திற்குத் தணிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் ஆண்டுதோறும், ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ALSO READ  வெளியானது "சுல்தான்" படத்தின் புதிய அப்டேட் !

நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடர்பான, ‘படிவம் 16’ ஜூலை 15ஆம் தேதிக்குள் வழங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா – பிரிட்டன் இடையே மீண்டும் விமான சேவை…!

News Editor

Pin Up 306 casino giriş qeydiyyat, bonuslar, yukle Бухгалтерские услуги в Мос

Shobika

மோடி குறித்த அவதூறு பேச்சு – ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை..

Shanthi