உலகம்

ஆப்கனிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்- தாலிபன்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை `முழு சுதந்திரம்’ என தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் தலிபான்களுக்கு அஞ்சி அங்கிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமானநிலையத்தில் வந்திறங்கின.

ஆப்கனை விட்டு மக்களை ஏற்றிச்செல்ல ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என அறிவித்திருந்தார்.

ALSO READ  ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு:

அவர் அறிவித்தது போலவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டது அமெரிக்க படை. காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் கிளம்பியதாக, அந்நாட்டின் மத்திய கட்டளை தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,

ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகிறது.

கடந்த 17 நாட்களில் கடந்த 17 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க குடிமக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவர்களுக்கு தாலிபன்கள் அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

ALSO READ  மியான்மரில் முடக்கப்பட்ட இணையதள சேவை வரிசையில் தற்போது டுவிட்டர் சேவையும் முடக்கம்:

இதனிடையே ஆப்கனில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மேஜர் ஜெனரல் க்ரிஸ் என்ற வீரர் தான் இறுதியாக விமானத்தில் எறியுள்ளார்.

இவரது படத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை, வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கனில் 20 ஆண்டுகால அமெரிக்க மிஷன் முடிவுக்கு வந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்……

naveen santhakumar

பற்றியேறியும் அமெரிக்க நாடாளுமன்றம்..! கட்டவிழ்த்துவிடப்பட்டதா வன்முறை…!

News Editor

சுவீடனில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விபத்து :

Shobika