இந்தியா

தீவிரமடையும் கொரோனா – 3வது அலை எப்போது? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர் மணீந்திர அகர்வால், அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும் எனத் தெரிவித்துள்ளார்.

COVID

மேலும், தற்போது பரவி வரும் மரபணு மாற்றமடைந்த கொரோனாவை விட வீரியமான, புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதத்திற்குள் தோன்றினால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் எனத் தெரிவித்துள்ளார் மணீந்திர அகர்வால்.

ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

அதேசமயம் மூன்றாவது அலை உச்சம் தொட்டாலும் அதன் தீவிரம் இரண்டாவது அலையின் தீவிரத்தில் நான்கில் ஒரு பங்குதான் இருக்குமெனவும், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த ஏப்ரல் – மே மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது நாட்டில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பானி பூரி பிரியர்களுக்கு நற்செய்தி- வந்தாச்சு பானிபூரி ஏ.டி.எம்… 

naveen santhakumar

புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு! 

News Editor

Pin-up Casino Resmi Web Sitesi Online Casinoda Gerçek Parayla Oynayı

Shobika