உலகம்

ரஷ்ய இயக்குனரால் விண்வெளியில் படமாக்கப்பட்ட ‘தி சேலஞ்ச்’ ஆவணப்படம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:

ஹாலிவுட்டில் விண்வெளியில் நடக்கும் கதைகளை கருக்களாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அப்போலோ சீரிஸ்கள் உள்ளிட்ட விண்வெளி கதைகள் அமைந்தாலும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விண்வெளி போன்ற செட்டுகள் அமைத்து அதில் படமாக்கப்பட்டது.

விண்வெளி வீரர்கள் குறித்த தி சேலன்ஜ் என்கிற படத்தின் படப்பிடிப்பு விண்வெளியில் நடந்தது. இதற்காக அந்த பட நிறுவனம் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

Russia to Shoot First Full-Length Movie in Space, 'The Challenge' - The New  York Times

ரஷ்ய இயக்குனர் க்லிம் ஷிபெங்கோ தலைமையிலான குழுவினர் இந்த படப்பிடிப்பை நடத்த கடந்த 12 நாட்களாக விண்ணில் உள்ள ஐ.எஸ்.எஸ்., சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொண்டனர்.

தி சேலஞ்ச் திரைப்படத்தின் கதையாக புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் விண்வெளிக்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே கதை.

ALSO READ  அமெரிக்க வாழ் இந்தியருக்கு  வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி..! 
Russian Film Crew Wraps Space Station Shoot and Returns to Earth - The New  York Times

இத்திரைப்படத்தில் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

முதன் முதலில் விண்வெளி சென்று திரும்பி வந்த முதல் ரஷ்ய நாய் லைகாவாகும். அதுபோன்று முதல் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின். முதல் பெண் விண்வெளி வீராங்கனை வேலன்டினா.ஆகியோர் விண்வெளிக்கு சென்று திரும்பினார்கள்.

ALSO READ  துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரிக்கு வெள்ளைமாளிகை எச்சரிக்கை..!

இதனையடுத்து தொடர்ந்து பரிசோதனை முயற்சியில் ஈடுபடும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம், வரும் டிசம்பர் மாதம் ஜப்பானிய செல்வந்தர் யுஸாகா மசாவாவை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Space Race 2.0: Russia trumps the US again, shoots feature film in orbit -  The Financial Express

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக விண்வெளியில் படமாக்கப்பட்ட தி சேலஞ்ச் ஆவணப் படத்தையும் தயாரித்து வெளியிட உள்ளது.

ரஷ்யா தொடர்ந்து விஞ்ஞான வளர்ச்சியிலும் விண்வெளி பரிசோதனை முயற்சியில் அனைத்து நாடுகளுக்கும் முன் மாதிரியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

News Editor

நாள் ஒன்றிற்கு 400 முறை சுயஇன்பம் செய்த பெண் மருத்துவமனையில் அனுமதி….

naveen santhakumar

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து 90,000விலங்குகள் உயிருடன் மீட்பு

Admin