தமிழகம்

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனூர், ஜேஜே நகர்,சின்னசேலம், திருக்கோவிலூர், நயினார்பாளையம், தகடி, கூத்தனூர் ஆகிய பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கலைஞர்கள் உள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாக மரசிற்ப கைவினைத்தொழிலை குல தொழிலாக பாரம்பரியமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். முன்னோர்கள் கிராமம் கிராமமாக சென்று கோயில் தேர் செய்து கொடுத்து வந்தனர்.

About Us

தற்போது கோயில் தேர், கோயில் உற்சவ மூர்த்தி, சாமிசிலைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மரசிற்பத்தால் பல வண்ணங்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

3 தலைமுறைக்கு முன் உள்ள முன்னோர்கள் கிராமம் கிராமமாக சென்று கோயில்களுக்கு தேர் செய்து கொடுத்து வந்தனர். தற்போது கோயில் தேர், கோயில் உற்சவ மூர்த்தி, சாமிசிலைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் மரசிற்பத்தால் பல வண்ணங்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ALSO READ  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு
The Tradiotional Yali Wooden Statue Wax Brownised, Wooden Statue, Wood  Sculptures, Wooden Sculpture, Wood Art Statue, वुड स्टेचू - Sengottuvel  Wood Carvings, Salem | ID: 16099253933

இவர்கள் தயாரிக்கும் மரசிற்பங்கள் அண்டை மாநிலங்களான பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

அமெரிக்கா, லண்டன், ஜெர்மன், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கள்ளக்குறிச்சி மரசிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக அரசு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது.

ALSO READ  சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது
Thanjavur Netti Works and Arumbavur Wood Carvings gets GI tag: Here's all  you need to know

இதன் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரும் என மர சிற்ப கைவினைபொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

GI Tag for Karuppur kalamkari paintings, Kallakurichi wood carvings - Read  important current affairs facts here for UPSC exam! - GKToday

மேலும் புவிசார் குறியீடு கிடைத்ததையடுத்து இங்கு உற்பத்தி செய்யப்படும் மரசிற்பங்கள் உலக அளவில் போற்றப்படும் மரசிற்பமாக தரம் உயரும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மரசிற்ப கலைஞர்கள் புவிசார் குறியீடு கிடைத்ததை பெருமையாக கருதுவதாக மர சிற்ப கைவினைபொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் ; முதல்வர் ஸ்டாலின் !

News Editor

தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; தற்காலிக குடில் அமைத்த அதிமுக எம்.எல்.ஏ !

News Editor

அர்ச்சகர்கர், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை; அறநிலைத்துறை அறிவிப்பு !

News Editor