இந்தியா

60ஸ் கிட்ஸ் காதல்: 35 வருடங்கள் காத்திருந்து காதலியை மணம் முடித்த தாத்தா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிக்கண்ணா. ஒமிக்ரான் வைரஸ் பரவலிலுக்கு போட்டியாக இவரது காதல் கதை கர்நாடகா மட்டுமல்ல உலகம் முழுக்க வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The-boy-friend-who-grabbed-his-girlfriend-at-the-age-of-65-Love-success-after-35-years-Marriage-finish

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர் ஜெயம்மா. இதேபகுதியை சேர்ந்த சிக்கண்ணா (65) தனது இளம் வயதில், ஜெயம்மாவை காதலித்துள்ளார். ஆனால், ஜெயம்மா இவரை காதலிக்கவில்லை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இவருக்கு குழந்தையில்லை என இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இவரை விட்டு சென்றுவிட்டார். ஆனால், அதன்பிறகும் ஜெயம்மா மீது அதே அன்போடும் காதலோடும் இருந்தார் சிக்கண்ணா.

ALSO READ  சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

மேலும், கட்டினால் ஜெயம்மாவை தான் கட்டுவேன் அல்லது கட்ட பிரம்மச்சாரியாக இருப்பேன் என இருந்தார். சிக்கண்ணா ஜெயம்மாவை தான் திருமணம் செய்வேன் என இருந்ததால் பலரும் ஜெயம்மாவிடம் இது குறித்து பேசினர். ஆனால் ஜெயம்மா சிக்கண்ணாவை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஒருவழியாக ஜெயம்மா சிக்கண்ணாவை திருமணம் செய்ய சம்மதித்தார். அதன்படி இவர்கள் திருமணம் மாண்டியாவில் உள்ள மேலுகோட்டே செலுவராய்சுவாமி கோவில் எதிரே சீனிவாஸ் குருஜி ஆசிரமத்தில் நடந்தது.

ALSO READ  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடர் அறிவிப்பு
image

இந்த மணவிழாவில் இரு தரப்பு உறவினர்களும் கலந்து கொண்டனர். 90ஸ் கிட்ஸ்களைவிட 60 ஸ் கிட்ஸ்கள் காதலில் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டி 35 ஆண்டுகளாக காத்திருந்து தன் காதலியை கரம் பிடித்த சிக்கண்ணாவை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

சூரியன் குளிர்ந்துபோகும்வரை; நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன் என்று எழுதிவைத்தார் ஷேக்ஸ்பியர். ஒருவேளை நம்ம சிக்கண்ணா தாத்தாவிற்கு தான் எழுதிவைத்தாரோ ஷேக்ஸ்பியர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளி வெளியே சுற்றினால் எஃப்.ஐ.ஆர்; சுகாதாரத்துறை செயலாளர்

News Editor

வங்கதேச தந்தைக்கு “காந்தி விருது” அறிவிப்பு !

News Editor

1XBET Azerbaycan İdman üzrə onlayn mərclər ᐉ Bukmeker şirkəti 1xBet giriş ᐉ aze 1xbet c

Shobika