இந்தியா

ஏ.டி.எம். களில் கட்டண உயர்வு : 2022 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி :

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான ஏ.டி.எம்., கட்டணம் ஜி.எஸ்.டி., உடன் ரூ.25 ஆக வசூலிக்கப்படும்.

5 ATM cash withdrawal rule changes you should know

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் அல்லது இருப்பை பரிசோதிக்கலாம்.

பிற வங்கி ஏ.டி.எம்.,களில் என்றால் மெட்ரோ நகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ATM cash withdrawal charges to increase from January 1. Check details here  | Business News

யாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

ALSO READ  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

வங்கி ஏ.டி.எம்.,களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட, அதிகமான முறை பணம் எடுப்போருக்கு, அடுத்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மாதமும் ஏ.டி.எம்., மையங்களில் குறிப்பிட்ட முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க, வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ALSO READ  ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிப்பு- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…. 

அந்த வரம்பை கடந்துவிட்டால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அப்படி வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஒரு மாதத்திற்கான வரம்பை மீறி ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்போருக்கு, வரும் ஜன., 1ம் தேதி முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Играйте В достаточно Чем 5000 лучших Бесплатных Игровых Автоматов!

Shobika

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

News Editor

கேரளா- கொரோனாவே ஓயவில்லை அதற்குள் ஜிகா வைரஸ்?

naveen santhakumar