தமிழகம்

மோடி பொங்கல் ரத்து…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேற்று பிரதமர் மோடி பஞ்சாப்பில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மோடி செல்ல வேண்டிய பாதையில் போராட்டம் நடத்தியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கு மக்கள் வராததால் திரும்பிச் சென்றதாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே மோடி டெல்லி திரும்பியதாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

ALSO READ  மக்களே தெரிஞ்சிக்கோங்க… 12 நாட்கள் விடுமுறை!

இதனிடையே மதுரையில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசின் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக ரத்து செய்வதாக கூறினார்.

மேலும் கட்சி நிகழ்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு விழா குறித்து தமிழக அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த காரணத்தை கொண்டும் தள்ளிப்போக கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு – இன்பார்க்ட் என்றால் என்ன ???

naveen santhakumar

ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

naveen santhakumar

கால்டாக்ஸி விவகாரம்; ஓட்டுநரை கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் !

News Editor