சினிமா

ஒரே படத்திற்கு இசையமைக்கும் 8 இசையமைப்பாளர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு படத்திற்கு 8 இசை அமைப்பாளர்களை பணியாற்ற உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து ஹீரோவாக அவர் நடித்த பியார் பிரேம காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடைசியாக தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்த ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக தாராள பிரபு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி !

இயக்குனர் ஏ.எல்.விஜயின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான விக்கி டோனர் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் தான்யா ஹோப், விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், கபீர் பாஸ்கர் ,ஷான் ரோல்டன்,விவேக்-மெர்வின், பரத் சங்கர், ஊர்கா, மேட்லி ப்ளூ, இன்னோ கங்கா ஆகிய 8 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நண்பரை கைப்பிடித்த “பூவே பூச்சூடவா” நடிகை…..

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

News Editor

பிரபல நடிகர் பெயரில்  வரும் தவறான குறுஞ்செய்தி…!

News Editor