அரசியல் இந்தியா

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் – அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடகாவில் ‘கிரகலட்சுமி’ திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த திட்டம் பொருந்தாது எனக் கூறி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் கர்நாடக அரசு குடும்ப தலைவிகளுக்கு 5 இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி கிரக லட்சுமி, இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டங்களை அமல்படுத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வருகிற ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு : அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கும்.

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். மேலும் இந்த திட்டத்திற்கு சேவா சிந்து இணையதள பக்கம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வருகிற 15ஆம் தேதி முதல் ஒரு மாதக் காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் பயனாளர்கள் தவறான தகவலை அளித்து திட்டத்தின் பயன் பெற்றது தெரியவந்தால், அவர்களிடம் உதவித்தொகை முழுவதுமாக திரும்ப பெறப்படும். பயனாளா்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம். குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவராகவோ இருந்தால், அத்தகையோருக்கு கிரகலட்சுமி திட்டம் பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மற்ற மாநிலங்களை போல புதுச்சேரி மக்களும் கஷ்டப்படக்கூடாது-ஆளுநர் தமிழிசை 

News Editor

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 2 வாரம் ஜாமீன்?

Shanthi

1xbet Application, 1xbet Download 1xbet Tətbiqi, 1xbet Tətbiqetməsini Necə Yükləmək Ola

Shobika