உலகம்

கேக் சாப்பிட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியாவில் அளவுக்கதிகமான கேக் சாப்பிட்டதால் பெண் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி தேசிய தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தேசிய தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இதனை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பு போட்டிகள் நடைபெற்றது.

இதில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் புகழ்பெற்ற ‘லாமிங்டன்’ எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

ALSO READ  கிரீஸ் நாட்டின் அதிபராகும் முதல் பெண்

இதில் பாலின பேதமின்றி பெரியவர், சிறியவர் என அனைவரும் கலந்து கொண்டு போட்டி போட்டு கேக் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதில் உற்சாகமாக பங்கேற்ற 60 வயது பெண்ணுக்கு தீடிரென தொண்டையில் கேக் சிக்கியது.

இதனால் அவர் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேசிய தினத்தன்று கேக் சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தென் பசிபிக் பெருங்கடலின் வானாட்டு தீவில் கடும் நிலநடுக்கம் :

Shobika

நண்பர்கள் மூலம் உலகை வலம்வரத் தொடங்கிய ’கெவன்’

Admin

ஹிட்லரின் முதலை என்று கூறப்பட்ட முதலை 84 வயதில் உயிரிழந்தது…

naveen santhakumar