ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு மேஷம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்:

மேஷ ராசியை பொறுத்தவரை உடலில் சிறு பாதிப்புகள் தோன்றினாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பாதிப்பால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆனாலும் இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையும்.

குடும்ப பொருளாதார நிலை:

உங்களுக்கு நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் பெறுவீர்கள். பொருளாதாரம் இந்த ஆண்டு உங்களுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும்.

தொழில் :

ALSO READ  "பிரபாகரன்" பெயர் சர்ச்சை: நடிகர் துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரிய பிரசன்னா....

நீங்கள் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் வருவதற்கு தாமதமாகும். வேலையாட்கள் உங்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அவர்களை கவனத்துடன் கையாள்வது நல்லது. அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முழு மன நிறைவற்ற நிலை உண்டாகும்.உங்கள் உடல் நிலையில் ஏற்படும் சிறுசிறு பாதிப்பினால் அலுவலகத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகள் செய்யும் சில விஷயங்களால் மனநிம்மதி குறையும். நீண்ட நாட்களாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் இந்த ஆண்டு கிடைக்கும்.

ALSO READ  சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்கியுள்ள 'Milk-Tea' கூட்டணி…

விவசாயிகள்:

விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருக்கும். சந்தையில் பொருட்களுக்கு இன்று விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோசமும் நிறைந்து இருக்கும்.

பெண்கள்:

மேஷ ராசியை பொறுத்தவரை உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் . நீங்கள் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு சில தாமதங்கள் ஏற்பட்டாலும் தடைகளை மீறி சாதிப்பீர்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்…!!

Admin

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை -அரசாணை வெளியீடு

naveen santhakumar