தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ந்தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20-ந்தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5-ந்தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விடுமுறையை அளித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.