சினிமா

இவரா தனுஷின் அடுத்த பட ஜோடி… வியக்கும் கோலிவுட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பட்டாஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தமிழில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்திலும் நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் எடுக்கும் இந்தி படமொன்றிலும் தனுஷ் நடித்துவருகிறார்.

இதற்கிடையில் தனது 43வது படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

ALSO READ  ‘அண்ணாத்த’ யாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி..

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 44 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.

தனுஷின் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நிவாரண நிதி அளித்த முதல் நடிகை !

News Editor

சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

naveen santhakumar

ஒரே நாளில் இப்படியா?… நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

naveen santhakumar