சினிமா

நடிகர் தனுஷ் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார்.

ALSO READ  மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி: நடிகர் துருவாவுக்கும், மனைவிக்கும் கொரோனா… 
Dhanush wanted to be an engineer initially | Bollywood - Hindustan Times

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியில் 50 சதவீதத்தை செலுத்தும்படி தனுசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்

இதன்படி அவர் 50 சதவீத வரி தொகையை செலுத்தி தன்னுடைய சொகுசு காரை பதிவு செய்து கொண்டார்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி S.M.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (வியாழக்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கர்ணன்” படத்தின் டீசர் குறித்து ட்வீட் செய்த தனுஷ் !

News Editor

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

ஓடிடி ரிலீஸை உறுதி செய்த ‘தலைவி’ படக்குழு !

News Editor