சினிமா

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வெளிநாட்டு கார் இறக்குமதிக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு வியாழக் கிழமை விசாரணைக்கு வருகிறது.

Dhanush On Vijay's Master Release: It's Great News For Cinema Lovers -  Filmibeat

நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  திரையரங்கில் 100 % பார்வையாளர்கள் அனுமதி ஆபத்தானது : அரவிந்த் சாமி கருத்து..!

இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

ALSO READ  பிரபல நடிகர் காளிதாஸ் மறைவு - திரையுலகினர் இரங்கல்..!

ஏற்கனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ் வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளின் நலன் குறித்து பேசிய த்ரிஷா:

naveen santhakumar

என்னை மன்னித்துவிடு வரலட்சுமி… சரத்குமாரின் உருக்கமான வேண்டுகோள்

Admin

பிரம்மாண்ட படத்திற்கு இப்படியொரு நிலையா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

naveen santhakumar