சினிமா

யாரும் இதுவரை கண்டிராத ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் வீடியோ…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். நெட்டிஸன்களுக்கு கண்டன்ட் ஏதும் கிடைக்காத காரணத்தால் பழையவற்றை தோண்டி எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் 23 ஆண்டுகளுக்கு முன் நடித்து வெளியாகமல் போன படத்தில் அவர் க்யூட்டாக டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டு உலக அழகி (Miss World) பட்டம் வென்றார். 

இதையடுத்து, 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கு அறிமுகமானார்.

‘இருவர்’ தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகிய இருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 

ALSO READ  "தீனி" படத்தின் டிரைலரை வெளியிட்ட தனுஷ் !

இதில் மோகன்லால் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்திலும் நடித்தனர். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். 

அதே ஆண்டில் பாலிவுட்டில் இயக்குனர் அனீஸ் பாஸ்மீ-ன் படத்தில் ஐஸ்வர்யா ராய் சுனில் ஷெட்டி உடன் இணைந்து நடித்தார். இது ஐஸ்வர்யா ராய்-ன் முதல் பாலிவுட் படம்.

Anees Bazmee

அனீஸ் பாஸ்மீ இயக்கிய அந்த படம் ‘ரதேஷ்யம் சீதாராம்’ என பெயரிடப்பட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால், அந்தப் படம் வெளிவராமல் போனது. 

Aishwarya Rai with Sunil Shetty.

இந்த நிலையில், குயின்ஸ்பாலி (Queensbolly) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனீஸ் பாஸ்மீ இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வெளிவராமல் போன ரதேஷ்யம் சீதாராம் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ பகிரப் பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் - முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்

23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் சினிமாவுக்கு அறிமுகமான கால கட்டத்தில், மிகவும் க்யூட்டாக பர்பிள் கலர் லெஹன்கா மற்றும் சோலி உடையில் டான்ஸ் ஆடிய அந்த வீடியோ நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகும், ஐஸ்வர்யா ராய்-ன் அழகான நடன அசைவுகள் அவருடைய ரசிகர்களை மீண்டும் நாஸ்டால்ஜியா காலகட்டத்திற்கே கொண்டு சென்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ஆனா டைரக்டா ஹீரோ தான்” என்று சொன்ன நடிகர் சடலமாக மீட்பு !

News Editor

14 பாடல்கள் கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன் லால் !

News Editor