சினிமா

சல்மான் கான் 6.9 கோடி நிதியுதவி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

ஊரடங்கு உத்தரவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் 6.9 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பாதிப்படைந்துள்ள திரைத்துறையை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் (Federation of Western Indian Cine Employees (FWICE)) 23 ஆயிரம் பேருக்கு தலா 3 ஆயிரம் வீதம் மொத்தம் 6.9 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

ALSO READ  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் :

இதுகுறித்து கூறிய அமைப்பின் தலைவர் B.N.திவாரி:-

திரைத் துறையைச் சேர்ந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 3,000 வீதம் 6.9 கோடி ரூபாய் சல்மான் கான் அவர்கள் கொடுத்துள்ளார். அதேபோல் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமும் ரூபாய் 5000 வீதம் 3000 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ALSO READ  புதுச்சேரியில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று !

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மும்பை மட்டுமல்லாது ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூர்- வை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் அளிக்க உள்ளார்.

அஜய் தேவ்கன், ரோஹித் ஷெட்டி, போனிகபூர் மற்றும் அனில் கபூர் ஆகியோரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளனர் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று 

News Editor

மீண்டும் வருகிறார் தேவசேனா – நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

naveen santhakumar

Bridal உடையில் கலக்கும் ஜான்வி கபூர்

News Editor