சினிமா

நேரடியா ‘OTT’யில் வெளியாகும் ஜகமே தந்திரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. பின்னர், கொரோனா பரவலின் வேகம் சற்று குறையத் தொடங்கியதையடுத்து, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படத்தினை பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று  திரையரங்கில் வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் அண்மையில் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள “ஜகமே தந்திரம்” படம் மார்ச் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகவலை படக்குழு உறுதி செய்யவில்லை.


Share
ALSO READ  ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனுஷ் பாடிய “திரௌபதையின் முத்தம்”; கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! 

News Editor

’பீஸ்ட்’ அப்டேட் – சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு …!

News Editor

உங்கள் பயம் புரிகிறது; உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; நடிகை குஷ்பூ கருத்து..!

News Editor