சினிமா

’பீஸ்ட்’ அப்டேட் – சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

Beast Update: Thalapathy Vijay And Pooja Hegde To Shoot A Song Sequence In  Chennai Today | LatestLY

கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ALSO READ  ‘தளபதி 66’ : விஜய்க்கு வில்லனாகும் நானி….!

இந்நிலையில், தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், பீஸ்ட் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக பூஜா ஹெக்டே- விஜய் பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ALSO READ  சசிகுமாரின் "பகைவனுக்கு அருள்வாய்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பிரம்மாண்ட பொருட்செலவில் பூஜா ஹெக்டேவின் 17வது படமாகவும் விஜயின் 65வது படமாகவும் தயாராகும் இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல இயக்குநர்,வசனகர்த்தாவான ஈரோடு சௌந்தர் காலமானார்:

naveen santhakumar

குடும்பங்களை குதூகலப்படுத்த வருகிறது அசத்தல் கதையம்சம் கொண்ட “மிடில்கிளாஸ்”:

naveen santhakumar

நடிகர் “பரத்” நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor