சினிமா

“பிசாசு 2” திரைப்படம்   பூஜையுடன் இன்று துவக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஸ்கின், இவர் முகமூடி, துப்பறிவாளன், பிசாசு போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

அதனையடுத்து மிஸ்கின் கடைசியாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தினை உருவாக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது.


அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆகையால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. பின்பு இயக்குனர் மிஸ்கின் அந்த தகவலை உறுதி செய்திருந்தார்.

ALSO READ  புதிய சாதனை படைத்த பிகில் திரைப்படம்…!


இந்தநிலையில், மிஷ்கின் இப்படத்தின் பணிகளை பூஜையுடன் இன்று  தொடங்கியுள்ளார் . நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஒரே கட்டத்தில் மொத்த படத்தினையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

அந்த பிரபலத்தின் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் :

Shobika

முதன்முறையாக தனது மகள்களுடன் மேடையில் பாடிய ஏ.ஆர் ரகுமான்…

Admin