சினிமா

93 வது ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகளவில் திரைப்படத்துறையில் சிறந்த கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது சினிமா கலைஞர்கள் மத்தியில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது,  மேலும் விருது பெறுபவர்கள் ஒரு கௌரவமாகவும் நினைக்கிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இவ்விருது வாழங்குவது வழக்கம் ஆனால் இந்த முறை உலகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் இரண்டு மாதம் தாமதமாக நடத்தப்பட்டது. 

93 வது ஆஸ்கார் விழா இன்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் நடைபெற்றது. இதில்  சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

93 வது ஆஸ்கர் விழாவில் விருது வென்ற படங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு…

சிறந்த நடிகை –  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லாண்ட்)

சிறந்த இயக்குநர் –  க்ளோயி சாவ் (நோமேட்லாண்ட்)

ALSO READ  சினிமா துறையில் கால்பதிக்கும் நடிகர் சந்தானத்தின் மகன் 

சிறந்த வெளிநாட்டு படம் –  அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஆவணப்படம் –  மை ஆக்டோபஸ் டீச்சர் 

சிறந்த அனிமேஷன் திரைப்படம் –  சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் –  கோலெட் 

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் –  ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த ஒளிப்பதிவாளர் –  எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் –  மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை –  எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை –  கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை –  ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

ALSO READ  கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 95 வயது முதியவர் !

சிறந்த பாடல் –  பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை –  யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்) 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு –  அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு –  டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை அப்டேட்; டப்பிங் பணியை முடித்த அஜித் !

News Editor

பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்கள் லீக்….அதிர்ச்சியில் படக்குழு…!!!

Shobika

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த “வெறித்தனம்” பாடல்

Admin