தமிழகம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு, நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை  சேர்ந்தவர் திருமாறன் (50 ) அதிமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் கண்டல்டென்சி நிறுவனமும் நடத்தி  வருகிறார்.  இவர் கடந்த சனிக்கிழமை அன்று  மறைமலை நகர் பகுதியில் உள்ள  கோவிலில் சனி பிரதோஷத்தில் கலந்து கொள்ள சென்றார். அங்கு வந்த 4 மர்ம நபர்கள்  திடீரென திருமாறன் மீது வெடிகுண்டு வீசி தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே திருமாறன் பலியானார்.அங்கிருந்த பக்தர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகளை அவருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் சுரேஷ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 நபரும் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திருமாறன் மற்றும்  சுரேஷ் ஆகியோர் உடல்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மறைமலை நகர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான ராஜேஸ் (48)  என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல்  நீதிபதி திரிவேணி முன்பு சரண் அடைந்தார். கொலை செய்யப்பட்ட திருமாறன் கொலையாளி ராஜேசும் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து  வந்தனர். அப்போது கொலையாளியான ராஜேஷ் துபாயில் வேலை செய்த வந்ததால் ரூபாய்  3 கோடி திருமாறனிடம் தந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு   உதவி புரிந்ததுடன் அதில் பார்ட்னராக செயல்பட்டுள்ளார். இதனிடையே ராஜேஷ் கொடுத்த பணத்தை  திருமாறன் திருப்பித் தர மறுத்ததுடன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும்  கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் முந்திக்கொண்டு  திருமாறனை, ராஜேஷ் முந்திக்கொண்டு கொலை செய்தார் என கூறப்படுகிறது.

ALSO READ  தடுப்பூசி போட்டுக் கொள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் - அதிர்ச்சி தகவல்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் போட்டியில் வெற்றி: முதல்வர் பாராட்டு

News Editor

இந்து சமய அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

News Editor

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழக பட்ஜெட்

Admin