சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான ஜி.வி பிரகாஷ் படத்தின் அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அந்த படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனையடுத்து பல்வேறு படங்களில் நடிகராக நடித்துவருகிறார். அந்தவகையில்  தற்போது ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தில், சுரபி, தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

ALSO READ  விஜய் 65 படத்தை தயாரிக்கிறதா...! சன் பிச்சர்ஸ்  


இப்படத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் பிறகு, படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அடங்காதே படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திரைப்படத் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு அடங்காதே திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெயரை மாற்றினார் நடிகை சமந்தா :

Shobika

” தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்” நடிகர் துல்கர் சல்மான் ட்வீட் !

News Editor

அனுஷ்காவின் அடுத்த சரித்திர கதையம்சம் கொண்ட படம்:

naveen santhakumar