சினிமா

சன்னி லியோன் பிறந்தநாள்: உருக்கமான வீடியோ வெளியிட்ட சன்னி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் மேலும் பாலிவுட்டில் மிகவும் அழகான கவர்ச்சியான நாயகிகளில் முக்கியமானவர் சன்னிலியோன் இன்று சன்னிலியோன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு தரப்பினரும் சன்னி லியோனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

சன்னி லியோனின் கணவர் டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னிலியோனுக்கு எமோஷனலான பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ஹேப்பி பர்த்டே பேபி எனது மனதில் உதிக்கும் அனைத்தையும் உன்னிடம் கூறி விடுவேன். நீ ஒரு மிகச்சிறந்த மனைவி தாய் மற்றும் காதலி. நீ மில்லியன் கணக்கானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்து உத்வேகத்தை அளிக்கிறாய்!! ஐகானிக்!!. உன்னை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ  பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் ! 

இன்று வாழ்த்து கூறிய ரசிகியர்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டு நன்றி கூறியுள்ளார் சன்னி லியோன். அதில அவர் கூறியிருப்பதாவது.

“எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. உங்களிடம் இருந்து இவ்வளவு அன்பு பெறுவதர்க்கு நான் ரொம்ப லக்கியான பெண். எனக்கு தெரியும் நாம் வெகு தூரத்தில் இருக்கிறோம். எந்த விஷயமும் செய்வது மிகவும் கடினமாக தான் இருக்கும். ஆனாலும் நாம் அனைவரும் இதை (கொரோனா) ஒரு பெரிய ஸ்மைல் உடன் கடந்து செல்வோம் என நம்புகிறேன்” என சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு ... "நானே வருவேன்" படம் குறித்து பகிர்ந்த செல்வராகவன் !

சன்னி லியோனின் உண்மையான பெயர் கரென்ஜித் கவுர் வொஹ்ரா. இவர் 1981 ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் பிறந்தார். நடிகை என்பதை தாண்டி பலராலும் கொண்டாடப்படுகிறார். பல தொண்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து நிதி அளித்து கவனித்து வருகிறார். இவரது கணவர் டேனியல் வெப்பர் உடன் சேர்ந்து பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தமன்னா’வின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்

News Editor

சுனைனாவின் இன்பாக்ஸ் முழுவதிலும் அன்பு நிறைந்து கிடக்கிறதாம்:

naveen santhakumar

OTT தளத்தில் வெளியாகும் ‘நரகாசூரன்’

Shobika