சினிமா

லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா ?…. விஜய் சேதுபதி விளக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் சேதுபதி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். ஆகையால் அவர் இன்று தமிழில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் கடைசியா நடித்த க /பெ ரணசிங்கம் திரைப்படம் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனையடுத்து விஜய்சேதுபதி லாபம் என்ற படத்தில் நடித்துவருகிறார், இப்படத்தை எஸ் பி ஜனநாதன் இயக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதஹாசன் நடித்துவருகிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளதால் படக்குழு படத்தின் வெளியிட்டு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் , கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என்று குழப்பம் அடைந்த ரசிகர்கள், லாபம் திரைப்படம் எதில் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர்.

ALSO READ  விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

இதற்கு “லாபம் திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸ் இல்லை. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்” என விஜய்சேதுபதி சமூக வலைதளத்தில் உள்ள தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த பதிவை லைக் மற்றும் ரீட்விட் செய்து வருகின்றனர்.

#vijaysethupathi #labam #shrutihaasan #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிரபல நடிகையின் மகன்…..

naveen santhakumar

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் உறவினர் திடீர் மரணம்…

naveen santhakumar

பெயரை மாற்றினார் நடிகை சமந்தா :

Shobika