சினிமா

‘புதிய மாற்றங்கள் வரட்டும்’ பினராயிக்கு மோகன் லால் வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தை போலவே  கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில்  நடிகர் மோகன்  லால் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும். எல்லா துறைகளிலும் நல்ல மற்றும் புதிய மாற்றங்கள் வரட்டும், கேரளா தொடர்ந்து உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  விக்ரம் சென்ற விமானத்தில் பிரச்சனை? திடீர் பரபரப்பு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதர்வாவுடன் கைகோர்க்கும் வாணி போஜன்

Admin

அனுஷ்கா சர்மாவின் ஹாட் பிகினி போட்டோ சூட்… 

naveen santhakumar

சல்மான் கான் 6.9 கோடி நிதியுதவி….

naveen santhakumar